தம்பலகாமத்தில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்
கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் மோதியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முனைச்சேனை பெற்றோல் விநியோக நிலையத்துக்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவியின் பின்னால் சென்று டிப்பர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற மனைவியே படுகாயமடைந்துள்ளதோடு அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பதுளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது


Comments
Post a Comment