Skip to main content
நீண்ட காலமாக காணப்படும் பதவி வெற்றிடம்
கிண்ணியா பிரதேச செயலகத்தில் ஒரு வருட காலமாக உதவிப் பிரதேச செயலாளர் பதவிக்கான இடம் வெற்றிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னர் கிண்ணியா பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக ஜீ.வவதாரணி கடைமையாற்றியுள்ளார்.அவரை ஈச்சிலம்பற்று பிரதேசசெயலகத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அவ்வெற்றிடத்துக்கு இது வரைக்கும் உதவி பிரதேச செயலாளர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.திடீர் இடமாற்றத்துக்கான மாற்று நடவடிக்கைகள் எதுவும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டதால் கிண்ணியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றது என பொது மக்கள் .இதனால் மேலும் பிரதேச செயலாளர் வேறு கடமை நிமித்தம் வெளியில் செல்வது, அவசர நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற விடயங்களால் மக்களின் அவசிய அரச சேவைகளை பெறுவதில் சிரமமாக உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.உதவிப் பிரதேச செயலாளரை அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய உயரதிகாரிகளையும் மாவட்ட அரசியல்வாதிகளையும் மக்கள் வேண்டுகின்றனர்.
Comments
Post a Comment