திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலி


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் விபத்துக்குள்ளான நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
கிளிவெட்டி மேகாமம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பூர் பகுதிக்கு சுற்றுலா சென்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments